Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’

பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’

Posted on October 21, 2019 By admin No Comments on பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’

”பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’ ”

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ மற்றும் ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’ படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது.

தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.. அந்தவகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ்சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும்.

பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, இசையமைக்கிறார் வினோத் யஜமான்யா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

’குற்றம் கடிதல்’, ’ஹவுஸ் ஓனர்’ என இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முக்கியமான படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம் ‘ரூம்’ படத்தை எடிட் செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Cinema News Tags:பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’

Post navigation

Previous Post: SanamShetty in a recent photoshoot
Next Post: அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள்

Related Posts

Samantha About Yashoda Samantha About Yashoda Cinema News
ஆதித்ய அருணாச்சலம் என் அப்பா - 'தர்பார்' குறித்து பிரபல நடிகை ஆதித்ய அருணாச்சலம் என் அப்பா – ‘தர்பார்’ குறித்து பிரபல நடிகை Cinema News
விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் க்ரைம் த்ரில்லர்* Cinema News
‘யோகி’ திரைக்கு 13 வருடங்கள்… கேக் வெட்டி கொண்டாடிய யோகி பாபு! கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார் யோகி பாபு!! Cinema News
தளபதி 64′ வதந்திகளை நம்ப வேண்டாம் இயக்குனர் Cinema News
வானம் கொட்டட்டும் திரை விமர்சனம் வானம் கொட்டட்டும் திரை விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme