Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி

பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி

Posted on October 21, 2019 By admin No Comments on பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி

தீயணைப்பு அலுவலர் அட்வைஸ்

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தீயணைப்பு அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி நாகராஜ் பேசும்போது , பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் , மீட்புப்பணிகள் பற்றிய செயல் விளக்கம் எப்படி என்பது குறித்து நேரடி செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கி தரவேண்டாம்.என்றார். நிகழ்வில் தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ரவிமணி ,தீயனைப்போர் தமிழ்செல்வம் , வசந்தகுமார் ,கண்ணன்,சத்யராஜ் ,மகேஸ்வரன் ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் . ஜோயல்,அய்யப்பன்,சிரேகா,ஜனஸ்ரீ உட்பட பல மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி நாகராஜ் நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

மேலும் கூறியதாவது :

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி நாகராஜ் கூறியாதவது :

வெடி வெடிப்பதை குறைத்து மாசுபடுவதை குறையுங்கள்

மற்றவருக்கு பாதிப்பு தரும் ராக்கெட் வெடிகளை தவிர்த்து விடுங்கள்
தீயணைப்பு அதிகாரி நேரடி செயல் முறை விளக்கம்

**வெடி ,வெடி வெடிப்பதால் நமக்கு ஒன்றும் நன்மை கிடையாது.வெடி வெடித்தோம் என்று வேண்டுமானால் மகிழ்ச்சி அடையாளம்.ஆனால் வெடி,வெடிப்பதால் தீமைகள் அதிகம் ஏற்படுகிறது.நாம் செல்லமாக வளர்க்கும் பூனை,நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளும்,நம் வீட்டில் உள்ள முதியவர்களும் வெடி சத்தத்தால் மிகவும் பாதிப்பு அடைவார்கள்.சிட்டு குருவிகள் அதிகம் பாதிக்கப்படும். இறுகிய உடைகளை போட்டு கொண்டு வெடி வெடிக்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்து கூறினார்.

??தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே ஊற்றாமல் கப்பில் அள்ளி தெளிக்க வேண்டும். மஞ்சள் அரைத்து அல்லது மஞ்சள் தூள் தடவ வேண்டும்.புஷ்வணம் ,வெடி ஆகிய அனைத்திலும் ஒரே மருந்துதான் பயன்படுத்தபடுகிறது. புஷ்வாணத்தில் வெடி மருந்து கொஞ்சம் தளர்வாகவும்,வெடியில் வெடி மருந்தை அதிக இறுக்கமாகவும் பேப்பரில் அடைத்து வைப்பார்கள்.இதுதான் வெடிக்கும் சத்தத்தின் அளவை மாற்றுகிறது.பாம்பு மாத்திரை அதிக மாசு அசுத்தத்தை ஏற்படுத்தும் என்றும்,அதனை தவிர்க்குமாறும் அறிவுரை வழங்கினார்.

** வெடிகளை வெடிக்கும்போது அதன் மேல் வெள்ளையாக உள்ள திரியை லேசாக பிய்த்துவிட்டு பிறகு நீண்ட ஊதுபத்தியை கொண்டு ,தள்ளி நின்று கொண்டு அந்த திரியில் பத்தவைக்கும்போது ஓரளவு பாதுகாப்பாக வெடிக்கலாம்.ஆனால் வெடிக்காமல் இருப்பது என்பது நமது பணத்திற்கும் நல்லது.சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் இருப்பதற்கும் நன்மை பயக்கும் என்றார்.

* பாட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள் .டெரிகாட்டன்,டெர்லின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை கண்டிப்பாக அணியக் கூடாது.

பாதுகாப்பான தீபாவளி தொடர்பான பொதுவான தகவல்கள்

* மூடிய பெட்டிகள் ,பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது.மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

*விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.ஏனெனில் அது உடலையும்,மனநிலையும் பாதிக்கும்.காதுகளை செவிடாக்கும்.பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்து கொண்டோ உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம்.மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடிக்க வேண்டும்.

FIRE விளக்கம்

FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு தீயை கண்டுபிடி,I என்ற எழுத்துக்கு தீயை தெரியபடுத்துதல் ,R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல், E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளி ஏறுதல் என்கிற விளக்கத்தை கொடுத்தார்.

மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா ,அப்பாவை பக்கத்தில் வைத்துகொண்டு வெடிக்கவும்.வெடிக்காத வெடியை கையில் எடுக்க கூடாது .

தீ விபத்தை A,B,C,D,E என வகை படுத்துகின்றனர்.A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும்.B என்பது ஆவியாகி எண்ணெயில் பட்டு தீ பிடிப்பது ஆகும்.இதனை.மணல் போட்டு அணைத்தல் வேண்டும்.

ராக்கெட் வெடி வாங்க வேண்டாம்.குப்பைகளை பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம்.

*பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனைசெய்யும் கடைக்கு முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக் கூடாது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்போ, பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.

Genaral News Tags:பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி

Post navigation

Previous Post: பிரதமரின் பசுமை வீடு ஆணை வழங்காத பிடிஓ பஞ் செயலாளர்கள் சஸ்பெண்ட் கலெக்டர் ஆடியோ வைரல்
Next Post: Ananya Birla is performing Live in Chennai

Related Posts

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான் Genaral News
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்!!! Genaral News
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Genaral News
வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்யும் வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பதாலும் தமிழகத்தில் மழை பெய்யும் Genaral News
பூனம் பாண்டே! - வைரலாகும் பூனம் பாண்டே! – வைரலாகும் Genaral News
Pollachi Movie Audio Launch Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme