Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள்

அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள்

Posted on October 21, 2019 By admin No Comments on அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள்

தஞ்சையில் பயங்கரம்-அண்ணனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஒத்தை காலில் நின்ற பெண்.. நிராகரித்த தாய்.. ஒரு கொலை!

அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள்
தஞ்சை: என் அண்ணனைதான் கல்யாணம் கட்டிப்பேன்.. என்று ஒத்தை காலில் நின்றார் தங்கை.. இந்த விபரீத காதலின் விளைவு கொலையில் போய் முடிந்துள்ளது!

திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஒரு ஊராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு விதவை… 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. இந்த சிறுமி பிளஸ் 2 வரை படித்து உள்ளாள்.
2 நாளைக்கு முன்னாடி, தாயும் மகளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். பொழுது விடிந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் அம்மா பிணமாக கிடக்கிறார். “என் அம்மாவை யாரோ அடிச்சி கொன்னுட்டாங்க” என்று மகள் கதறி கதறி அழுது கொண்டே பக்கத்து வீட்டில் சொல்லவும், அவர்கள் பதறியடித்து கொண்டு வந்து வீட்டிற்குள் பார்த்தனர்.
ஐயா பாருங்க.. அம்மா பாருங்க.. இப்படி ஒரு தேர்தலை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா!

விசாரணை
அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனடியாக திருவையாறு போலீசுக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றினர்.. பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். அக்கம் பக்கத்தில் போலீசார் இதை பற்றி விசாரித்து கொண்டிருக்கும்போதே மகள் நைசாக நழுவி சென்றாள். இதை கவனித்துவிட்ட நம் போலீசார், மகளை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். எடுத்த எடுப்பிலேயே எல்லாத்தையும் ஒப்புக் கொண்டாள் மகள்.

அண்ணன்
“என் சொந்தக்காரர் ஒருத்தரை நான் காதலிச்சேன்.. ஆனா எனக்கு அவர் அண்ணன் முறை.. இந்த காதல் விவகாரம் என் அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு.. “அண்ணனை தங்கச்சி காதலிக்கலாமா? இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா, நம்ம குடும்ப மானமே போயிடும்… அதனால அவனை காதலிக்காதே..” என்று கண்டித்தார். இது எனக்கு எரிச்சலை தந்தது. அதனால், நாங்க ரெண்டும் ஊரை விட்டே சில தினங்களுக்கு முன்பு ஓடிட்டோம்.

வாபஸ்
ஆனால் எங்க அம்மா என்னை காணோம்னு திருவையாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தாங்க. நான் மைனர் என்பதால், என்னை கடத்தி சென்ற என் காதலனை கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டனர். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்தார். வெளியே வந்ததும், என் அம்மாவை பார்த்து கேஸ் வாபஸ் வாங்கிடுங்கன்னு.. உங்க பொண்ணை எனக்கு கட்டிக்கொடுங்கன்னு கேட்டார். நானும் என் அம்மாகிட்ட இதை பத்தி எவ்வளவோ சொன்னேன்.

பிடிவாதம்
ஆனால் என் அம்மாவோ, முறை தவறிய உறவு இது? ஊர் உலகத்துல அண்ணன் தங்கச்சி கல்யாணம் பண்ணுவாங்களா? என் பொண்ணை உனக்கு கட்டித்தர மாட்டேன்னு சொல்லி, அவரை திட்டி அனுப்பிட்டாங்க. ஆனாலும் என் காதலன், கட்டினா உன்பொண்ணைதான் கட்டுவேன்னு சொல்லிட்டு போயிட்டார். இந்த விஷயமாதான் ராத்திரி எனக்கும் எங்க அம்மாவுக்கும் பிரச்சனை வந்தது. எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. அப்போதான் என் அம்மாவை இரும்பு கம்பி எடுத்து தலையில அடிச்சி கொன்னுட்டேன்” என்றார். இதையடுத்து, அந்த சிறுமியையும், அந்த காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
அண்ணனை தங்கை காதலித்த சம்பவம் ஒரு ஷாக் என்றால், பெற்ற தாயை மகள் இரும்புக் கம்பியால் அடித்து கொன்றது அதை விட அதிர்ச்சியை தந்துள்ளது.

Genaral News Tags:அண்ணனை திருமணம் செய்துவைக்க மறுத்த தாய்..அடித்து கொன்ற மகள்

Post navigation

Previous Post: பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட முக்கால்வாசி படம் ; த்ரில்லிங்கில் மிரட்ட போகும் ‘ரூம்’
Next Post: மூட்டுவலிக்கு நச்சுகொட்டை இலையை(கீரை) வதக்கியும்

Related Posts

Eco Friendly Electric Scooters launched to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies. Genaral News
பெண்கள் உண்மையிலேயே கணவர்களிடமிருந்து விரும்புவது என்ன பெண்கள் உண்மையிலேயே கணவர்களிடமிருந்து விரும்புவது என்ன ? Genaral News
சாஹோ படத்தில் இருந்து விலகிய பிரபலங்கள்!! Genaral News
தபோல்கர் கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் கைது Genaral News
ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட்-indiastarsnow.com ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் Genaral News
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் சீனியர் நடிகை! – அதிர்ச்சியில் திரையுலம் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme