இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “என்னைப் பொறுத்த வரையில், நான் என்ன செய்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம். அடுத்தவர்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வார்கள்; அப்படிச் சொல்வார்கள் என்றெல்லாம் நான் ஒரு போதும் கவலையே பட மாட்டேன். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவன். வெறும் கமர்ஷியல் இயக்குநர் என்கிற பார்வையை, ஒரே நாளில் என்னால் மாற்றி விட முடியும். என் மீதான விமர்சனங்களைப் பொறுத்த வரையில், பேசுறதுக்கு, அவங்களுக்கு நிறைய நேரம் இருக்கு. செய்றதுக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. இது தான் நிஜம். யாருடைய விமர்சனமும் என்னை ஒரு நாளும் பாதிக்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.
