.
பொய்களை பரப்புவது ஸ்டாலினுக்கு உகந்ததல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியின் ஏனாம் பகுதியை ஆந்திராவுக்கு தாரை வார்க்க கிரண்பேடி முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் பா.ஜ.கவின் மறைமுக ஆட்சியை புதுச்சேரியில் செய்து வருவதாகவும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்த கிரண் பேடி, தவறான கருத்துக்களை பரப்புவதற்கு முன், யாரை பாதுகாக்கிறீர்கள் என்பதை ஸ்டாலின் யோசிக்க வேண்டும் என தெரிவித்தார். பொய்களை பரப்புவது ஸ்டாலினுக்கு உகந்தது அல்ல என்றும் கிரண்பேடி பதிலளித்துள்ளார்.