தற்போது நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலையும் இந்த கூட்டணி சந்திக்கின்றது. இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து தீடிர் திருப்பமாக செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தனது இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால், அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இது அதிமுக தரப்பிற்கு பெறும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பத்து கோரிக்கைகளை முன்வைத்தது பாமக வைத்த பத்துக்கோரிக்கைகளில் ஒன்றைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதால், டாக்டர். ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்து மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவும் தனது முடிவை விலக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.