Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது

தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது

Posted on October 20, 2019 By admin No Comments on தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.

தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இந்த இருவரும்.

இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.

படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை மகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.. மேலும் திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் சின்னத்திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

கேரளாவில் வசிப்பவர்தான் என்றாலும் அபிலாஷ் வளர்ந்தது படித்தது எல்லாம் செங்கோட்டையில் தான்.. 2008 முதல் சென்னையில் இருந்த காலகட்டத்தில் இவர் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டே அனிமேஷன் தொழில்நுட்ப பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

அந்த சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் சொன்ன அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு ரொம்பவே மனம் வருந்தினார் அபிலாஷ்.

அவர்களது துயர அனுபவங்களை உலகத்தினர் முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒரு படம் இயக்க எண்ணினார்.. இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும், வியாபார காரணங்களால் இப்படத்தைத் தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை.

அப்படியே கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், இந்த படத்தின் கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இந்தப் படத்தில் நடிப்பதுடன் தானே தயாரிக்கவும் முன்வந்தார்..

மிக அழகாக, தரமாக இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடித்துவிட்டார்கள்.. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கத்தால் கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். இது தவிர கவிஞர் பாரதிதாசனின் தலைவாரிப் பூச்சூடி என்கிற பாடலையும் இந்த படத்தில் சூழலுக்குத் தகுந்தவாறு இணைத்துள்ளனர்.

மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்… விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரசாந்த் பிரணவ் என்பவர் இப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும் தயாரிப்பாளர் ராமச்சந்திரனும்.

Cinema News Tags:தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது

Post navigation

Previous Post: Actress Vedhika Latest pic
Next Post: Actress RaashiKhaana looks stunning in this latest photoshoot

Related Posts

வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது RJ பாலாஜி நடிக்கும், “வீட்ல விசேஷம் திரைப்பட டிரெய்லர் நாளை வெளியாகிறது ! Cinema News
இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் Cinema News
சாக்‌ஷி அகர்வால் ‘பொய்யின்றி அமையாது உலகு’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு Cinema News
Victory Venkatesh, Nawazuddin Siddiqui, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project Saindhav Launched Grandly Cinema News
கார்த்தி – ஜோதிகா படத்தில் இணைந்த மற்றொரு நடிகை Cinema News
Michael First Look Dropped Sundeep Kishan, Vijay Sethupathi, Ranjit Jeyakodi, Sree Venkateswara Cinemas LLP, Karan C Productions LLP’s Pan India Film Michael First Look Dropped Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme