Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

Posted on October 20, 2019 By admin No Comments on குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.

“உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், “22 ஆண்டுகளாக ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷ்த்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்” என்றார்.

Cinema News Tags:அதுல்யா ரவி, குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா

Post navigation

Previous Post: சுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ ஒற்றை வீடியோ
Next Post: சிறுநீரகக் கல் கரைக்கும்… மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை!

Related Posts

PATTAAPAKAL BEGINS WITH A POOJA AND TITLE LOOK LAUNCH. PATTAAPAKAL BEGINS WITH A POOJA AND TITLE LOOK LAUNCH. Cinema News
Aishwarya_Rajesh தளபதி விஜய் யுடன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் Cinema News
Propshell announces Mrs. Raadhika Sarathkumar as brand ambassador and special scheme for women buyers Cinema News
ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார் ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார் Cinema News
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்???? Cinema News
பிரமாண்ட “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா ! பிரமாண்ட “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா ! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme