Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

காவியான் திரைவிமர்சனம்

காவியான் திரைவிமர்சனம்

Posted on October 20, 2019October 20, 2019 By admin No Comments on காவியான் திரைவிமர்சனம்

தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ஷாமை, அமெரிக்காவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். இவருடன் ஸ்ரீநாத்தும் பயணிக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், ஷாம் மற்றும் ஸ்ரீநாத்துக்கும் பயிற்சி அளிக்கிறார். நம்ம ஊர் போலீஸ் அவசர உதவி எண் 100 போல், அங்கு 911 என்ற நம்பர் செயல்பட்டு வருகிறது.

இந்த கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஸ்ரீதேவி குமார். இந்நிலையில், மர்ம நபரால் பாதிக்கப்படுவதாக ஒரு பெண் 911க்கு போன் செய்கிறார். இதை கேட்கும் ஸ்ரீதேவி, அவருக்கு உதவ நினைக்கிறார். ஆனால், முடியாமல் அந்த பெண் மர்ம நபரால் கடத்தப்பட்டு இறந்து போகிறார். இதனால் வருத்தப்பட்டு வேலையை விட்டு செல்கிறார் ஸ்ரீதேவி குமார்.
இதையறியும் ஷாம், ஸ்ரீதேவியை சமாதானம் செய்து மீண்டும் வேலையில் சேர வைக்கிறார். சில தினங்களில் மற்றொரு நாயகியாக இருக்கும் ஆத்மியா, அதே மர்ம நபரால் பாதிக்கப்படுகிறார். அதே போல் ஸ்ரீதேவிக்கு போன் வர, ஷாம் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் ஆத்மியாவை ஷாம் காப்பாற்றினாரா? பெண்களை கடத்தும் அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவர் அப்படி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாம், புறம்போக்கு, தில்லாலங்கடி ஆகிய படங்களை தொடந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இலங்கை பெண்ணாக நடித்திருக்கும் ஆத்மியாவை காரிலேயே அதிக நேரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வில்லனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளில் பரிதாபம் பட வைக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதேவி குமார், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நல்ல கிரைம் கதையை, முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்தசாரதி. ஆனால், நீண்ட நேரம் கதை செல்வதுபோல் அமைத்திருக்கிறார். அதுபோல் சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை செல்கிறது. இதில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷ்யாம் மோகனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.

Cinema News, Movie Reviews Tags:kaaviyyan tamil movie Review, காவியான் திரைவிமர்சனம்

Post navigation

Previous Post: பாமகவின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு
Next Post: ஆப்கான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 29 பேர் பலி.

Related Posts

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18ம் தேதி வெளியாகிறது Cinema News
மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ Cinema News
ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஸ்ருதிஹாசன் திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன் Cinema News
Meera-mitun-slams-kangana_indiastarsnow.com ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு? – மீரா மிதுன் பாய்ச்சல் Cinema News
விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி கார்த்திக் சுப்பராஜ் தகவல்! விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? கார்த்திக் சுப்பராஜ் !! Cinema News
தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு போட்டியில் டைட்டில் வென்ற தினேஷ்குமார் தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு போட்டியில் டைட்டில் வென்ற தினேஷ்குமார் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme