‘இந்தியன் 2’ – ஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு 40 கோடி ரூபாய்
⭐கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது போபால் நகரில் சுமார் 2,000 துணை நடிகர்களுடன் நடைபெற்றுவருகிறது. இந்த படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 40 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து வருகிறார்.