ஆப்கான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 29 பேர் பலி.
ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 29 பேர் பலியாகினர். 64 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பலியாகினர். 64 பேர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கன் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இரு தீவிரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது வெடுகுண்டுகளை வீசினர். இதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இந்தத் தக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இதில் தாலிபன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருகலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆப்கனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொதுமக்களுள் 1,700 பேர் பலியாகியுள்ளனர்.