ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகை நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆதித்ய அருணாச்சலம் என்னுடைய அப்பா” என்று ✍குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் ரஜினிகாந்தின் மகளாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதி ஆகியுள்ளது.
