Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஷாலினி பாண்டே இந்தி படத்தில்

ஷாலினி பாண்டே இந்தி படத்தில்

Posted on October 17, 2019October 17, 2019 By admin No Comments on ஷாலினி பாண்டே இந்தி படத்தில்

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து ஒரு படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் விக்ரம் மகன் துருவ் நடிக்க ரீமேக்கும் ஆகிறது. தொடர்ந்து ஷாலினி பாண்டேக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

கொரில்லா படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த 100 சதவீதம் காதல் சமீபத்தில் திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கில் தயாராகும் நிசப்தம் படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் நடித்து வருகிறார். இட்டரி லோகம் ஒக்டே என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.
மேலும் சில படங்களுக்கு கதை சொல்லி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெஸ்பாய் ஜோர்தார் என்ற இந்தி படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்க ஷாலினி பாண்டேவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை விட மனமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளை இந்தி படத்துக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

அவர் ஏற்கனவே நடித்த படங்கள் பாதியில் நிற்பதாக பட உலகினர் குறை சொல்கிறார்கள். இந்தி படத்தை முடித்து விட்டுத்தான் மற்ற படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஷாலினி பாண்டே மீது தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளிக்க முடிவு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Cinema News Tags:Shalini Pandey, ஷாலினி பாண்டே இந்தி படத்தில்

Post navigation

Previous Post: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அசுரன் படத்தை பார்த்து ரசித்த பாராட்டியுள்ளார்
Next Post: ஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார்

Related Posts

சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன் - சாய் பல்லவி சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன் – சாய் பல்லவி Cinema News
பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாலை நேரத்து மல்லிப்பூ நினைத்துப் பார்க்க முடியாத சப்ஜெக்டை 21 வயதில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் நாராயணன் – இயக்குநர் வசந்த் பேச்சு Cinema News
Nayanthara-hot-www.indiastarsnow.com தெலுங்கு பட உலகமும் நயன்தாரா ரசிகர்களும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்! Cinema News
ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த 'சீதா ராமம் ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த ‘சீதா ராமம்’ Cinema News
Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote Cinema News
Aval Peyar Rajni First Look Revealed! Aval Peyar Rajni First Look Revealed! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme