இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகவுள்ள ’பேய்மாமா’ படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். ஆனால் ’இம்சை அரசன்’ படத்தின் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவால் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் வடிவேலு நடக்கவேண்டிய கதாபாத்திரத்தில் ?யோகிபாபுவை நடிக்க வைத்து தற்போது சக்தி சிதம்பரம் அந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குமுளி அருகே நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் யோகிபாபுவுடன் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
