பிகில்’ திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்
அட்லீ இயக்கத்தில் ⭐விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், கதிர், வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் 178 நிமிடங்கள் 59 விநாடிகள் நேரம் கொண்டது என தணிக்கை சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் ✍தெரிவித்துள்ளார்.