தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் திருமணமான நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரால் மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், அந்த நபர் தனது இச்சைக்கு என்னை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்ததோடு, அவரால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக சில மாதங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
ஆண்ட்ரியாவை நாசமாக்கிய அந்த திருமணமான நடிகர் யார்? என்பதை அறிந்துக் கொள்வதில் ரசிகர்களும், ஊடகங்களும் தீவிரம் காட்டிய நிலையில், அந்த நடிகர் பெரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த வாரிசு, என்ற தகவல் வேகமாக பரவியது.
இந்த நிலையில், தன்னை சீரழித்த திருமணமான நடிகர் யார்? அவர் தன்னை எப்படி சீரழித்தார் என்பதை, தன்னைப் பற்றி எழுதும் புத்தகத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறாராம். இந்த புத்தகத்தை அவர் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை வெடிக்கும் என்றும், அதே சமயம் அவர் அரசியல் குடும்ப வாரிசு என்பதால், ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.