நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று காலை தூத்துக்குடி விமானநிலையம் வந்து இறங்கிய நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான திரு R.சரத்குமார் அவர்கள் செவி – பார்வை குறைபாடுள்ள ஆனால் அந்த குறைபாடுகளை மறந்து சாதிக்க நினைக்கும் பள்ளி மாணவர்கள் தன்னை நேரில் பார்க்க விரும்பியதை அறிந்ததும் நாங்குநேரி பிரச்சாரத்திற்கு செல்லும் அவசரத்தில் இருந்த போதிலும் அந்த மாணவர்களை சென்று சந்தித்து உறையாடி அவர்களை மகிழ்வித்து மகிழ்ந்தார்.
“குறைபாடுகள் மனம் குன்றியவருக்கே அன்றி உடல் குன்றியவருக்கு இல்லை. இவர்களின் தைரியமும் அன்பும் உற்சாகமும் என்னை நெகிழச் செய்தது. அவர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்த நிகழ்வை இறைவனின் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்” என்று திரு R.சரத்குமார் கூறினார்.