Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி

Posted on October 17, 2019 By admin No Comments on நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி

நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் அஜித்குமார். படப்பிடிப்பு குழுவினருக்கு ருசியாக சமைத்து கொடுத்தும் பாராட்டு பெற்றுள்ளார். சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் வான்வெளி ஆராய்ச்சி குழு ஆலோசகராக பணியாற்றினார். ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு உதவி செய்தார். துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். சமீபத்தில் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலானது. இந்த போட்டியில் 3 பிரிவுகளில் அவர் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான பட்டியலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9-வது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் பிடித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Cinema News Tags:நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள்

Post navigation

Previous Post: விஜய்சேதுபதியுடன் பிரம்மாண்டமாக கொண்டாடிய அம்ரீஷின் பிறந்தநாள் விழா
Next Post: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அசுரன் படத்தை பார்த்து ரசித்த பாராட்டியுள்ளார்

Related Posts

SRK’s Jawan sets new record enters 500cr club in india, globally nearing the 1000cr benchmark! All in just 13 days, the film has garnered record numbers in the southern states as well. It’s unstoppable!* Cinema News
Music Director C Sathya’s indie song ‘Penne Penne’ for International Women’s Day Cinema News
என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள ‘வதந்தி’ ட்ரைலரில் பாராட்டுகளைக் குவித்த குமரன் தங்கராஜன் பெருமிதம் Cinema News
அடியே’ பட குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா* Cinema News
பார்வையாளர்களை அசத்திய ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஹாலிவுட் பிரபலங்கள் ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்காக ஒன்றுதிரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள் Cinema News
*Vijay Deverakonda and Samantha Starrer Kushi Fifth single ‘En Ponnamma’ is a groovy and fun number* Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme