திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன், நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கும் நிலையில், அவனது கூட்டாளியான சுரேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கொள்ளையடித்த பணத்தை வைத்து திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட முருகன், பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் சுரேஷ் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவரிடம் சுரேஷும், முருகனும் திரைப்படம் தயாரிப்பது குறித்து பேசி கால்ஷீட் கேட்டதோடு, கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை அவருக்கு பரிசாகவும் வழங்கினார்களாம். அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட அந்த நடிகை, நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போதைக்கு தேதி ஒதுக்க முடியாது, என்று கூறியிருக்கிறார்.
அந்த நடிகை யார்? என்பதை சுரேஷ் போலீஸிடம் தெரிவித்தாலும், அவர்கள் அதை வெளியிடவில்லை. அதே சமயம், அந்த நடிகையிடம் இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்துள்ளது.
இந்த தகவலால் அந்த நடிகை யார்? என்பதை தெரிந்துக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், வாரிசு நடிகையான அவர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் படங்களில் நடித்திருப்பதாக குளூ கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் விருது வாங்கிய நடிகையாக இருப்பாரோ, என்று ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள்.