Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர்

எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர் விரைவில் வெள்ளித்திரையில்

Posted on October 17, 2019October 17, 2019 By admin No Comments on எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர் விரைவில் வெள்ளித்திரையில்

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் எதிர்வினையாற்று

24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – ஷெரீப் (அருவி புகழ் வேதாந்த் பரத்வாஜ் இசையில் ஒரு மெல்லிசை பாடல் உருவாகி இருக்கிறது)
ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன்
படத்தொகுப்பு – சந்திர சேகரன்
கலை – பாலா ஓம் பிரகாஷ்
தயாரிப்பு – தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்

Cinema News Tags:எதிர் வினையாற்று, எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர்

Post navigation

Previous Post: நடிகர் நெப்போலியன் டெவில்ஸ் நைட்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது
Next Post: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை முருகனிடம் நகைகளை பெற்ற தமிழ் நடிகை இவரா?

Related Posts

SS Rajamouli protégé Ashwin Gangaraju to direct magnum opus 1770 created by Ram Kamal Mukherjee. SS Rajamouli protégé Ashwin Gangaraju to direct magnum opus 1770 created by Ram Kamal Mukherjee. Cinema News
Ramgopal Varma & Isha Koppikar are back together after 10 years for MX Original Series Ramgopal Varma & Isha Koppikar are back together after 10 years for MX Original Series Cinema News
ajith-www.indiastarsnow.com அஜித் பற்றி என்ற கேள்விக்கு “கனவு” என சொன்னார் யாஷிகா ஆனந்த் Cinema News
shanam shetty-indiastarsnow.com சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு Cinema News
பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு தமிழ் ரசிகர்கள் தனித்துவமானவர்கள்” நெகிழ்ந்த ‘பனாரஸ்’பட இயக்குநர் Cinema News
விரைவான படப்பிடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் 'எல். ஜி. எம்' விரைவான படப்பிடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் ‘எல். ஜி. எம்’ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme