Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த

ராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல்! எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி

Posted on October 16, 2019 By admin No Comments on ராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல்! எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி

ராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த.

டெல்லி: இந்து மகாசபா சமர்ப்பித்த புத்தகத்தை சன்னி வக்பு வாரிய வக்கீல் கிழித்தெறிந்த சம்பவம், அயோத்தி வழக்கு விசாரணையின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அயோத்தி வழக்கில் இன்று இறுதிவாதம், சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.
இந்து மகாசபா சார்பில், மூத்த வழக்கறிஞர், விகாஸ் சிங், இன்று உச்சநீதிமன்றத்தில் தனது வாதத்தை ஆரம்பிக்கும்போது குணால் கிஷோர் எழுதிய “அயோத்தி ரீவிசிட்டட்” (Ayodhya Revisited) புத்தகத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன் என்றார். புத்தகத்தையும் சமர்ப்பித்தார்.இந்த புத்தகத்தில் 1810ம் ஆண்டின் அயோத்தி மேப் பற்றிய விவரம் இடம் பெற்றுள்ளது. அதில் ராமர் அயோத்தியில் பிறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக விகாஸ் சிங், தெரிவித்தார்.

ஆனால் சன்னி வக்ஃப் வாரியத்தின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், அந்த புத்தகத்தை சமர்ப்பிக்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார். புதிதாக எந்த ஆதாரத்தையும், இந்த வழக்கில் சமர்ப்பிக்க கூடாது என்றார். மேலும், தன் எதிர்ப்பைத் தெரிவிக்க அவரிடம் ஒப்படைத்த புத்தகத்தின் பக்கங்களை தவான் கிழித்து எறிந்தார். இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிமன்றத்தின், மாண்பை காப்பாற்ற வேண்டும். இப்படி வாதம் நடைபெற்றால், நாங்கள் நீதிமன்றத்திலிருந்து எழுந்து சென்றுவிடுவோம் என்றார். இதனால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வாதம் மீண்டும் ஆரம்பித்தது.

Political News Tags:ராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த

Post navigation

Previous Post: ரஜினிகாந்த் 168 பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க முடிவு
Next Post: சுருதிஹாசன் நிதானமான வாழ்க்கையை வாழ்கிறேன்

Related Posts

john-kumar-www.indiastarsnow.com ஜான் குமார்.. இடைத் தேர்தலில் போட்டி.. டெல்லி பதவியை துறந்தார் Political News
பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் Genaral News
CM-candidate-talk-on-in-AIADMK-2021-indiastarsnow.com அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் Political News
ttv-indiastarsnow.com அமமுக பொருளாளர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பால் காலமானார் Political News
kerala-tasmac-www.indiastarsnow தமிழ்நாட்டை பீட் பண்ணிய கேரளா டாஸ்மாக் Genaral News
-Emanuel-Sekaran-MemorialPolitical-party-leaders-pay_www.indiastarsnow.com தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme