பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற மீரா மிதுனும் சில பிரபலங்கள் குறித்த சீக்ரெட் விஷயங்களை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார்.
சமீபத்தில் சோசியல் மீடியாவில் ‘மூடகூடம்’ இயக்குநர் நவீனுடன் மோதலில் ஈடுபட்டவர், “நீங்கள் என்னுடன் போனில் பேசிய உரையால் இருக்கிறது, அதை வெளியிடட்டுமா? அதை வெளியிட்டால் உங்கள் வீட்டு பெண்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினார். அவரது இந்த பதிவை தொடர்ந்து அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நவீன், அமைதியாகிவிட்டார்.
இந்த நிலையில், தான் யார் என்று தெரியாமல் என்னிடம் பேசுகிறீர்கள், சினிமாவில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் தான் நீங்கள், ஆனால் நான், தமிழகத்தையும் தாண்டி பிரபலமாக இருக்கிறேன்.” என்று கூறியிருக்கும் மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனக்காக நான்கு பேர் அடித்துக் கொண்டார்கள், என்றும் கூறியிருக்கிறார்.
இத்துடன் இல்லாமல், தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய பல ரகசியங்கள் என்னிடம் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டு நான் யார்