தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற
தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தர்பார் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அனிருத்தின் இந்த திடீர் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தர்பார் படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.