திங்கட்கிழமை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் பிரார்த்தனை செய்த ரஜினி, தரிசனத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தர்பார்’ படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தின் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தேன்” என்றார்.
இதேபோன்று பல்வேறு கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்யவுள்ள ரஜினி, துவாராகாட்டில் தான் கட்டியுள்ள குருசரண் ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் இந்த இமயமலை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ரஜினியின் நண்பர் ஹரி செய்துள்ளார்.