ஆரோக்கியமான வாழ்கையை பெற விரும்புபவர்கள் மட்டும் இதை படிக்கவும்.
தட்டையான வயிற்றை பெற யாருக்குத்தான் ஆசை இருக்காது.
அனால் இன்றைய சூழ்நிலையில் இளமையிலேயே பானை போன்ற தொப்பையுடன் திருமணத்திற்கு முன்பே ‘அங்கிள்’ / ‘ஆண்ட்டி’ போன்று காட்சியளிக்க நேரிடுகிறது.
இதற்கு ஒரே தீர்வு –
உடற்பயிற்சி.
முகபரு, கருவளையம், முக சுருக்கம், முடி கொட்டுதல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மருத்துவர்கள் கூறும் சிறந்த தீர்வு முறையான மற்றும் சீரான உடற்பயிற்சி தான்.
⚜உடற்பயிற்சி செய்வதின் நன்மைகள்:
1. தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும். மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.
2. உடலுறவில் குதூகலம்: தினசரி உடற்பயிற்சி செய்தால், உடலின் வலிமையையும் ஆற்றலும் அதிகரிக்கும். அதனால் துணைவியின் முன், ஆண்மையுடன் காட்சி அளிப்பீர்கள். மேலும் உடலுறவும் இன்பம் மிக்கதாக அமையும். சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால் பெண்களை கவர்வது மட்டுமல்லாமல், ஆண்மை குறைவு போன்றவற்றையும் தடுக்கலாம்.
3. உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுபாட்டில் இருக்கும். மணம் அமைதியாய் இருக்கும் இதனால் தன்னம்பிக்கை அதிகரிபதுடன் கவலைகளும் நீங்கும்.
4. இதயம் சீராக இயங்கும். பரம்பரை இதய நோய் இருந்தாலும் நீண்டகால உடற்பயிற்சி மூலம் சரிசெய்யலாம்.
5. சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவை உட்கொள்வதன் மூலம் அழகான உடலமைப்பை பெறலாம்.
6. சீரான இரத்த அழுத்தம்.
7. சர்க்கரை நோய், இரத்த கொழுப்பு (Blood Cholesterol) போன்றவைகளை எளிதாக குறைக்கலாம்.
8. சீரான உடற்பயிற்சி மூலம் அழகான மேனி, உறுதியான முடி, இளமையான தோற்றம் மற்றும் உறுதியான உடலமைப்பை பெறலாம்.
9. சீரான தூக்கம்.
10. எலும்புகள் வலுவடைவதன் மூலம் மூட்டு வழியை குறைக்கலாம்.
11. நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
12. அதிக நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், முதுகு வழியை நிரந்திரமாக தடுக்கலாம்.
உடற்பயிற்சி செய்ய வேண்டிய வயது = 15 to 65.
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.