`டிக் டிக் டிக்’ படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் `டெடி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான சாக்ஷி அகர்வால் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இவர்களுடன் சதீஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.