நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே, அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு.
சித்து பிளஸ் 2 வில் திரைக்கதை பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ‘ராஜா ரங்குஸ்கி’ வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. இவரது நடிப்பை கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட. உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இப்படத்தை அடுத்து ராதாமோகன் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். சாந்தினியின் படங்கள் வரிசையில் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.