Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை

ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை

Posted on October 13, 2019 By admin No Comments on ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை

ரூம் போட்டு ஜாலி.. டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை!

வேலூர்:
ரூம் போட்டு டீச்சருடன் ஜாலியாக இருந்தும் இல்லாமல்.. அவரை கர்ப்பமாக்கிவிட்டு.. “உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று தைரியமாக சொல்லி உள்ளார் ஒரு இளைஞர்! இறுதியில் அந்த டீச்சரை கத்தியால் குத்தியதுடன், தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவத்தால் ராணிப்பேட்டையே நடுங்கிவிட்டது.

அருகே ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் டீச்சர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 31. அம்மா, அப்பா கிடையாது. ஒரு அண்ணன் மட்டும் உள்ளார்.
கல்யாணமும் ஆகவில்லை. அதனால், எப்ப பார்த்தாலும் செல்போன், ஃபேஸ்புக்கிலேயே பொழுதை ஓட்டி உள்ளார். அப்போதுதான் விஜய்சங்கர் என்பவர் அறிமுகம் ஆகிஉள்ளார். இவர் நெல்லையை சேர்ந்தவர்.வெறும் 6 மாச அறிமுகம்தான்.. அதற்குள் எல்லா சீக்ரட் விஷயங்களையும் அவரிடம் பேசி வந்துள்ளார் டீச்சர்.

லாட்ஜ்
இதனால் டீச்சரை நேரில் பார்க்க ஆர்வம் ஏற்பட்டு, அடிக்கடி வேலூர் வந்து லாட்ஜில் ரூம் போட்டு தங்கி உள்ளார். டீச்சரையும் லாட்ஜ்-க்கு வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளார். டீச்சரும் கர்ப்பமாகிவிட்டார். இதனால் கல்யாணம் செய்துகொள்ள விஜய்சங்கரை வற்புறுத்த ஆரம்பிக்கவும், போன மாசம் டீச்சரின் வீட்டுக்கே வந்துவிட்டார். தன் வீட்டிலேயே விஜய்சங்கரை தங்க வைத்து கொண்டு, ஒரு வேலையும் வாங்கி தந்துள்ளார் டீச்சர்.

விஜய்சங்கர்
இப்படியே ஒரே வீட்டில் நாட்கள் போனதே தவிர, கல்யாணம் செய்து கொள்ள விஜய்சங்கர் விரும்பவே இல்லை போலும். ஒரு கட்டத்தில் வாயை திறந்து சொல்லியே விட்டார், “உன்னையெல்லாம் கல்யாணம் செய்துக்க முடியாது” என்று.

கத்திகுத்து
இதனால் அதிர்ந்து போன டீச்சர், சண்டைக்கு வந்துவிட்டார். இதைக்கண்டு உஷாரான விஜய்சங்கர், இப்படியே விட்டால் சரியாக இருக்காது, பேசாமல் தீர்த்துவிடவேண்டியதுதான் என்று கணக்கு போட்டு, கத்தி எடுத்து தூங்கி கொண்டிருந்த டீச்சரை சரமாரி குத்தி விட்டார். முகம், கழுத்து, தோள்பட்டையில் கத்திகுத்து விழுந்ததில் டீச்சருக்கு ரத்தம் கொட்டியது. ஆனாலும், ரூமில் இருந்து அலறி கொண்டே வந்து, விஜய் சங்கரை வீட்டுக்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டிவிட்டார்.

காருக்குள் டீச்சர்
இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டீச்சரின் அண்ணனும் விஷயத்தை கேள்விப்பட்டு, அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வேறு ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்து சென்றபோது. அப்போது வாகன போலீசார் வழக்கம்போல் சோதனைக்காக காரை நிறுத்தவும்தான், காருக்குள் ரத்த வெள்ளத்தில் டீச்சர் இருப்பதை அறிந்து விசாரித்தனர்.

தற்கொலை
இதன்பிறகு, அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, பூட்டப்பட்ட வீட்டுக்குள் இருந்து விஜய்சங்கரை மீட்டகலாம் என்று கதவை திறந்தனர். ஆனால் உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டு இருக்கவும், தட்டி பார்த்தனர். திறக்கவே இல்லை. இதனால் உடைத்து காண்டு உள்ளே சென்று பார்த்தால், விஜய்சங்கர் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார். இதையடுத்து சடலத்தை மீட்டு விசாரணை நடந்து வருகிறது.

Genaral News Tags:ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் டீச்சர் கர்ப்பம்.. கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்.. தானும் தற்கொலை

Post navigation

Previous Post: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு
Next Post: அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள பள்ளியில் சிறப்பு விருந்தினராக நடிகர் R.சரத்குமார்

Related Posts

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது Genaral News
Revolt-Electric-Motorcycle-Deliveries-Begin_indiastarsnow தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெவோல்ட் ஆர்.வி.300, ஆர்.வி.400 மற்றும் ஆர்.வி.400 பிரீமியம் Genaral News
பொன்னியின் செல்வன்’ பற்றி மனம் திறந்த பிரபல நடிகை  Genaral News
Young Tamil female Director Miss Bahinie Thevarajah wins Best director and best film awards at various global film festivals earns global Genaral News
அறிமுக இயக்குனர் பிரித்வி படத்தில் நடிகர் ஆதி Genaral News
முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சராகிறார் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme