அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. பெண்கள் ⚽கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “யார்வேண்டுமென்றாலும் நடிக்கலாம். படத்தை வெளியிடலாம். விஜய் இசைவெளியீட்டு விழாவில் ஜனநாயக அடிப்படையில் பேசினார். அதனை நாங்கள் ஜனநாயக முறையில் சந்தித்தோம்” என்று கூறியுள்ளார்.