நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் திடீரென்று நடிகர் விஜய் பட போஸ்டரை ஆக்ரோஷமாக கிழித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்தனர்.
இதையடுத்து அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், மீன், கறிக்கோழி, ஆட்டு இறைச்சியை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த கால் வைத்திருப்பது போன்று உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.