ஒன்றரை வயது
தெலங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர், ஒன்றரை வயதான கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் லக் ஷ்மன். இவர் அப்பகுதியில் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டின் அருகில் மாடு கட்டியிருந்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த கிராமத்தினர் லக்ஷ்மனை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர் மாட்டுசாணம் வாங்க வந்ததாக கூறினார். எனினும், அவர் சொன்ன காரணங்களை நம்பாத கிராமத்தினர், மிருகங்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுவந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கன்று கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடைபெற்றிருக்கிறதா என்று பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம். இதற்கிடையில் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பாடவர் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்று தெலங்கானா நிஸாம்புர் நவிபேட்டை காவல்துறை துணை ஆய்வாளர் வெங்கடேஷ்வர்லு தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட லக்ஷ்மன் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 377ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.