நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான திரு R.சரத்குமார் அவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகிய போர்ட் பிளேரில் உள்ள காமராஜ் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
“மாணவர்கள் எதிர்காலத்தின் தூண்கள், படிப்பு அவர்களுக்கான யுக்தியை அமைத்து கொடுக்கிறது, தூண்கள் வலிமையாக நிற்க உங்களின் படிப்பு மிகவும் முக்கியம்” என்று மாணவர்களுக்கு திரு R.சரத்குமார் அறிவுரை கூறினார்