Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

puppy-movie-review-indiastarsnow.com

puppy movie review

Posted on October 12, 2019October 12, 2019 By admin No Comments on puppy movie review

கல்லூரி மாணவண் நாயகன் வருண், வகுப்பறையில் SEX VEDIO வீடியோ பார்த்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். வருண் வீட்டிற்கு மேலே குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நண்பர் யோகிபாபுவின் அறிவுரைப்படி சம்யுக்தாவிடம் காதலை சொல்லுகிறார் வருண்.

நாயகி சம்யுக்தா உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வருணுக்கு, அந்த சூழ்நிலையும் அமைகிறது. இருவரும் ஒன்றாகி சில நாட்களில் சம்யுக்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்கிறார். வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று நினைக்கும் இவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் வருண் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தாலும், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட், நடனம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க இவரை சுற்றியே கதை நகர்வதால் அதை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். நாய் மீதான செண்டிமெண்ட் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகி சம்யுக்தாவிற்கு பொருப்பான கதாப்பாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். வருணின் நண்பராக வரும் யோகிபாபு படம் முழுவதும் பயணிக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், கண்டிப்பான அப்பாவாக வரும் மாரி முத்து ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

இளைஞர்கள் இளம் பெண்களுடன் பழக ஆசைப்பட்டு, காதல், அதைத் தொடர்ந்து கர்ப்பமாக்குதல், பின்னர் அதை கலைக்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஒரு உயிரை கொல்வது மிகவும் தவறு. இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் ஒரு ஆணும் பெண்ணும் கட்டுப்பாட்டுடன் பழக வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ். இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி விழிப்புணர்வு படமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார்.

தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். தீபக் குமாரின் ஒளிப்பதிவு கலர்ப்புல்லாக அமைந்திருக்கிறது.

Cinema News, Movie Reviews Tags:puppy-movie-review-indiastarsnow.com

Post navigation

Previous Post: Namita official Photoshoot
Next Post: Petromax Movie Review

Related Posts

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் பிரத்யேக காட்சி இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ தொடரின் பிரத்யேக காட்சி Cinema News
25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த 'சீதா ராமம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ Cinema News
Uriyadi Vijay Kumar has reunited with Reel Good Films for their second project together Uriyadi Vijay Kumar has reunited with Reel Good Films for their second project together Cinema News
Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote Cinema News
வர்த்தக ரியல் எஸ்டேட் பிரிவில் நுழையும் காசாகிராண்டு;காசாகிராண்டு கமர்ஷியல் எனும் புதிய வர்த்தக பிரிவு உருவாக்க திட்டமிட்டிருக்கிறது வர்த்தக ரியல் எஸ்டேட் பிரிவில் நுழையும் காசாகிராண்டு;காசாகிராண்டு கமர்ஷியல் எனும் புதிய வர்த்தக பிரிவு உருவாக்க திட்டமிட்டிருக்கிறது Cinema News
avm -indiastarsnow.com எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme