பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரை சந்தித்தார் இசையமைப்பாளர் தரண்
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் தரண். இவர் சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, இசையமைப்பாளர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். இது குறித்து தரண் கூறுகையில், ரஜினியை சந்திக்க வேண்டுமென்பது என் சிறு வயது முதலான ☺கனவு என்றும். அவரைச் சந்தித்த தருணம் வாழ்வின் உன்னதமான ஒன்றாக அமைந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தன் வாழ்வின் மறக்கமுடியாத பொன்னான நினைவுகள் என்றும் கூறினார்.