பிரபல நடிகைக்கு வைர மோதிரம் பரிசு
‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். ஆனால் அந்த படத்தில் சிரஞ்சீவியின் காதலியாக நடித்த தமன்னாவின் நடிப்பிற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. இந்நிலையில், சைரா படத்தை தயாரித்த நடிகர் ராம் சரணின் மனைவி உபசான, விலையுர்ந்த வைர மோதிரம் ஒன்றை தமன்னாவிற்கு பரிசளித்துள்ளார். அதே சமயம், படத்தில் மற்றொரு நாயகியாக நடித்த நயன்தாராவிற்கு பரிசு எதுவும் வழங்கப்படவில்லை.