சூப்பர் ஸ்டாருக்காக விட்டுக்கொடுத்தரா சூர்யா
‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா இயக்கி வரும் ‘சூரரைப் போற்று’ படம் முடிந்தவுடன் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 39வது படம் ஆரம்பமாகும் என்று கடந்த ஏப்ரல் 22ம் தேதி அறிவிப்பு வெளியாகியது. ஆனால் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், சூர்யா, சிவா படம் எப்போது ஆரம்பமாகும் என்ற கேள்வி ?எழுந்துள்ளது. முன்னதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த சமயத்தில்தான் ‘கபாலி’ படத்தை இயக்க பா.ரஞ்சித் சென்றார். ஆனால் இதுவரையிலும் சூர்யா, பா.ரஞ்சித் படம் ஆரம்பமாகமலேயே உள்ளது. இப்போது மீண்டும் சூர்யா விட்டுக் கொடுத்துவிட்டாரா⁉ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
