Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும்

இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும்

Posted on October 12, 2019October 14, 2019 By admin No Comments on இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும்

ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இசை: அம்ரிஷ், ஒளிப்பதிவு: முத்து கே.குமரன், படத்தொகுப்பு: கோபி கிருஷ்ணா, வசனம்: நீலன் கே.சேகர், பாடல்கள்: அருண்பாரதி, முருகானந்தம், கலை: ஏ.பழனிவேல், நடனம்: தினேஷ், ஸ்டண்ட்: விஜய் ஜாகுவார், தயாரிப்பு மேற்பார்வை: ஜி.சங்கர், நிர்வாக தயாரிப்பு: கேஆர்.ஜி.கண்ணன், இணை தயாரிப்பு : டாக்டர் ஆர்.முருகானந்த்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கதையின் நாயகன்கள் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், கதாநாயகிகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஜாக்குவார் தங்கம், இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தரணி, திருமலை, நடிகர் நட்டி என்கிற நட்ராஜன், நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் பலர் கலந்துக் கொண்டனர்.

Sambavam Film Pooja Starring – Srikanth Dance Master Dinesh, Poorna Shrustidange

Cinema News Tags:SAMBAVAM Film Pooja, இன்று பட பூஜையுடன் தொடங்கிய சம்பவம் படப்பிடிப்பு ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும்

Post navigation

Previous Post: தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பாராட்டு தமன்னாவுக்கு
Next Post: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ சங்கத்தமிழன்’ படத்துக்குச் சிக்கல்

Related Posts

தி ஹாண்டட் ஹவுஸ் ரியா தி ஹாண்டட் ஹவுஸ் திகில் கதையின் நாயகனாக ஆர்.பாண்டியராஜன் நடிக்கும் Cinema News
தும்பா’ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு Cinema News
இப்படத்தின் டீஸர் வெளியானதும் பார்க்கிறேன்; எனக்கும், விஷாலுக்கும் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய் – நடிகை சுனைனா லத்தி படத்தின் டீஸரைப் பார்த்தால் விஷால் திரைக்கு வெளியே வந்து அடித்து விடுவார் போல இருக்கிறது; நிறைய அடிபட்டு நடித்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின் Cinema News
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் நடிகை Cinema News
டாஸ்மாக் கடைகள் கூடுகின்றன; திரையரங்குகள் குறைகின்றன: பேரரசு பேச்சு Cinema News
அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அருள்நிதி நடிக்கும் டைரி பட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme