Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா

Posted on October 11, 2019 By admin No Comments on இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை அதிகாரபூர்வ அறிவிப்பு. இதில் யார் யார் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் அதிகாரி கோபால்சாமி வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகிக்கும் மாநிலம், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அரசு விளையாட்டு அமைப்புகள் என்று மொத்தம் 38 கிரிக்கெட் சங்கங்களின் உறுப்பினர்களில் 8 சங்கங்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது மணிப்பூர், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, அரியானா, மராட்டியம், ரெயில்வே, சர்வீசஸ், அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் ஆகிய கிரிக்கெட் சங்கங்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுபோடும் உரிமையை இழக்கிறது. இதில் சர்வீசஸ், ரெயில்வே, பல்கலைக்கழகம் ஆகியவை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தை தொடங்காததாலும், மற்ற மாநிலங்கள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைக்குட்பட்டு மாநில நிர்வாகிகள் தேர்தலை நடத்தாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து மாநில கிரிக்கெட் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Genaral News Tags:இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் பங்கேற்க 8 சங்கங்களுக்கு தடை அதிகாரபூர்வ அறிவிப்பு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா

Post navigation

Previous Post: ஒலிம்பி க் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வது எனது இலக்கு பி.வி.சிந்து சென்னையில் பேட்டி
Next Post: சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் ; லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் வேண்டுகோள்

Related Posts

Pollachi Movie Audio Launch Genaral News
மெட்ரோ ரயில் நிலையங்களில் படிப்படியாக குளிர்சாதன வசதி குறைக்கப்படும் Genaral News
சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை Genaral News
kryolan Make-up Brand Kryolan Launches their first Standalone Store and Training Centre in Chennai Cinema News
பாகிஸ்தானில் பயங்கரம் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர் !!!!!! Genaral News
commissioner A.K.Viswanathan-indiastarsnow.com சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme