Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர் டார்க் பேட் நவம்பர் மாதம் முதல் தேதி இப்படம் வெளியாகிறது

அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர் டார்க் பேட் நவம்பர் மாதம் முதல் தேதி இப்படம் வெளியாகிறது

Posted on October 11, 2019 By admin No Comments on அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர் டார்க் பேட் நவம்பர் மாதம் முதல் தேதி இப்படம் வெளியாகிறது

இதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்!

உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்த டெர்மினேட்டர், அப்படத்தின் நாயகன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரை மெகா ஸ்டாராக மாற்றி விட்டது. அர்னால்டின் இந்த ஐகானிக் டெர்மினேட்டர் வேடம் ஜட்ஜ்மெண்ட் டேயிலிருந்து டார்க் பேட்டாக (Terminator: Dark Fate) மாறியிருக்கிறது. ஆம்…டெர்மினேட்டர் தொடரின் அடுத்த படமான டெர்மினேட்டர் டார்க் பேட் ( Terminator: Dark Fate) நவம்பர் மாதம் முதல் தேதி வெளியாகிறது.

இப்படம் குறித்து அர்னால்ட் கூறியதாவது…
இது மற்றுமொரு டெர்மினேட்டர் படம் என்றாலும் முழுக்க முழுக்க மாறுபட்ட கதையம்சம் கொண்டது. ஜிம் கேமரானின் முத்திரையை படம் முழுக்க பார்க்கலாம். மேலும் இப்படத்தில் லிண்டா ஹேமில்டனும் இருக்கிறார். எனவே பழைய டெர்மினேட்டர் காலத்துக்கே இப்படம் அழைத்துச் செல்லும். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்தப் படத்தில் இதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகள் கண்களுக்கு நல்ல விருந்தளிக்கும்.

ஜிம் கேமரான் மற்றும் லிண்டாவுடன் இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் உங்களை 1984ஆம் ஆண்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டதா

முழுக்க முழுக்க 84ஆம் ஆண்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்ல முடியாது. ஆனால் 84 மற்றும் 91ஆம் ஆண்டுகளுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லலாம். இந்த ஆண்டுகளில் இவரகளுடன் பணிபுரிந்த நான் இப்போது மீண்டும் இணைந்திருப்பது நல்ல அனுபவமாக இருந்தது. 84ஆம் ஆண்டுதான் முதல் முறையாக நான் இயந்திர மனிதனாக நடித்தேன். அதுவே எனக்கு வேடிக்கையகவும் வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது.

வெஸ்ட் வேர்ல்ட் படத்தில் யூல் பிரைய்னர் ஏற்று நடித்த வேடத்தை நான் பார்த்திருக்கிறேன். வலிமையான அந்த பாத்திரப் படைப்பை நம்பகத்தன்மையுடன் அவர் செய்ததைப்போலவே நானும் செய்ய ஆசைப்பட்டேன். எனவே எனக்கு ஊக்க சக்தியாக இருந்தது யூல் பிரைய்னர்தான்.

காலவெளியில் பயணிக்கும் மனிதன் ரீஸி என்ற வேடத்தில் நான் நடிக்கத்தான் முதலி்ல் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் ஜிம் கேமரானை முதல் முறையாக நான் சந்தித்தபோது டெர்மினேட்டர் எப்படி நடக்க வேண்டும், யந்திர மனிதனாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் விரிவாகப் பேசினேன். அதில் திருப்தியடைந்த ஜிம் கேமரான் டெர்மினேடர் வேடத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை ஒப்பந்தம் செய்தார். இப்படித்தான் நான் டெர்மினேட்டர் ஆனேன்.

அர்னால்ட் ஸ்வார்ஸனேகர், லிண்டா ஹேமில்டன், மற்றும் எட்வர்ட் பர்லங் ஆகியோர் முறையே தங்களை அடையாளப்படுத்தும் ஐகானிக் வேடங்களில் நடித்திருக்கும் டெர்மினேட்டர் டார்க் பேட் (Terminator: Dark Fate) படத்தை ஜேம்ஸ் கேமரான் தயாரித்திருக்கிறார். ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் தேதி இப்படம் வெளியாகிறது.

Cinema News Tags:Terminator: Dark Fate, அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர் டார்க் பேட் நவம்பர் மாதம் முதல் தேதி இப்படம் வெளியாகிறது

Post navigation

Previous Post: சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் ; லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் வேண்டுகோள்
Next Post: American Superstar Arnold Schwarzenegger Terminator: Dark Fate Film on 1st November 2019 in 6 langauges World Wide release

Related Posts

BoyapatiRAPO First Thunder strikes with stupendous appeal! BoyapatiRAPO will release in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi October 20th for Dussehra. Cinema News
பூமி அறக்கட்டளை நடத்தும் Bhumi campus awards 2022 பூமி அறக்கட்டளை நடத்தும் Bhumi campus awards 2022…. Cinema News
நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் வெற்றி Cinema News
‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா! ‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா! Cinema News
ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய " பேய காணோம்" படக்குழு ! ரிலீஸுக்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிய ” பேய காணோம்” படக்குழு ! Cinema News
ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம் ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme