இயக்குனர் பாலா தனது அடுத்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் 3 பேரை இணைத்து இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பாலா கடைசியாக இயக்கிய படம், நாச்சியார். இதில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்த பாலா, இனி தான் யார் என தமிழ் சினிமாவுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை போல தற்போது அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது முந்தைய ஹீரோக்களான சூர்யா, ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோரை இணைத்து ஒரு படம் டைரக்ட் செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
சூர்யா மற்றும் பாலா ஆகியோருக்கு இடையே நந்தா படப்பிடிப்பின்போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இதுவரை இணையாமல் இருந்தனர். ஆனால் தற்போது இருவரும் ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால் தங்களது கோபங்களை விட்டுவிட்டு மீண்டும் இணைய இருக்கின்றனர்.
சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்க பாலாவின் படங்கள் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.