ஷங்கர் கமல் கூட்டணியில் இந்தியன் 2 தொடங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பட ஆரம்பம் ஆகி சில தினங்களில் பிரச்சனைகளால் கை விடப்பட்டது. கமலுக்கு மேக் அப் பிடிக்கவில்லை, ஷங்கர் அட்ஜஸ்ட் செய்யவில்லை, லைக்கா விடம் பணம் இல்லை என பலவாறு பேசப்பட்டது.
பின்னர் மீண்டும் துவங்கியது. ஒளிப்பதிவாளர் மாற்றம் என ரத்தினவேலு இணைந்தார். சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங், விவேக் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் இப்படத்தில் விவேக் CBI அதிகாரி ரோலில் நடிப்பதாக சொல்கின்றனர் கோலிவுட்டில் விஷயம் அறிந்தவர்கள். முதல் பாகத்தில் புலனாய்வு அதிகாரியாக நெடுமுடி வேணு நடித்திருப்பார்.
ஷங்கர் கூட்டணியில் விவேக் பாய்ஸ், அந்நியன், சிவாஜி என இதுவரை மூன்று ப்ரொஜெக்ட்டுகளில் கலக்கியுள்ளார். இந்த செய்தி மட்டும் உண்மையாகும் பட்சத்தில் காமெடியும் கலந்து மெரளவைக்கும் இந்தியன் 2 என்பதில் சந்தேகமே இல்லை.