Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா

உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா, விளக்கம் வெளியீட ராஜ்கமல் நிறுவனம்

Posted on September 27, 2019 By admin No Comments on உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா, விளக்கம் வெளியீட ராஜ்கமல் நிறுவனம்

கமல் தன்னிடம் ‘உத்தம வில்லன்’பட ரிலீஸுக்காக 10 கோடி பணம் வாங்கிவிட்டு இதுவரை திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார் என்று ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் கூறியிருக்கும் புகார் அபாண்டமானது. அது கமலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது என்று ராஜ்கமல் நிறுவனம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

கமலஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தமவில்லன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், இந்த படம் ரிலீஸ் ஆகும்போது பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டதால் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூபாய் 10 கோடி கடன் பெற்றதாகவும் அந்த பணத்திற்கு பதிலாக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்து வந்தார்.இந்த நிலையில் ரூபாய் 10 கோடி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நமது நிறுவனத்திற்காக கமல்ஹாசன் படம் நடிக்க முன்வரவில்லை என்றும் ரூபாய் 10 கோடி பணத்தையும் அவர் திருப்பி தரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் தெரிவித்திருந்தார்.
ஞானவேல் ராஜாவின் அப்புகாருக்கு இன்று விளக்கம் அளித்த கமலின் ராஜ் கமல் நிறுவனம்,…தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு எந்த பணமும் வழங்கவில்லை. கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். ‘உத்தம வில்லன்’பட ரிலீஸ் சமயத்தில் ஞானவேல் ராஜாவை கமல் சந்திக்கவேண்டிய அவசியம் கூட ஏற்படவில்லை. இந்த அபாண்ட புகார் தொடர்பாக ஞானவேல் ராஜா மீது மிக விரைவில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்’என்று தெரிவித்துள்ளனர்.

Cinema News Tags:உத்தமனை வில்லனாகும் ஞானவேல்ராஜா, விளக்கம் வெளியீட ராஜ்கமல் நிறுவனம்

Post navigation

Previous Post: Tamil Nadu Progressive Writers Association and Madras Kerala Samaj Press Meet Stills
Next Post: நடிகர் சிம்பு வேற லெவல் புகைப்படம் வெளியாகியுள்ளது

Related Posts

KD Film Review KD Film Review Cinema News
Actor AshokKumar Latest pic-inadiastarsnow.com Actor AshokKumar Latest pic Cinema News
biggboos tamil 3-indiastarsnow.com பிக்பாஸ் தர்ஷனை ராஜாவாக மாற்றி… மற்றவர்களை ஆட்டி படைக்கும் மஹத் – யாஷிகா.. Cinema News
விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது! விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது! Cinema News
”யூடியூபர்கள் மூட்டிவிடும் சண்டையில் பலிகடா ஆகி விடாதீர்கள்” ; ரசிகர்களுக்கு இயக்குநர் பேரரசு எச்சரிக்கை “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல் Cinema News
ரஜினியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme