பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியது, ஆளும் கட்சியினரை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் தலைவா படத்தை விட பெரிய சம்பவம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகின்றனர்.
எப்பொழுதுமே தளபதி விஜய்யின் திரைப்பட வெளியீட்டின்போது பல பிரச்சனைகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எப்போதுமே அரசியல்வாதிகள் நேரடியாக தாக்காமல், மறைமுகமாக வேறு வேறு பிரச்சினைகளை கிளப்பி விடுவார்கள். ஆனால் தற்போது ஆளுங்கட்சி அமைச்சர்கள் தளபதி விஜயின் பேச்சுக்கு நேரடியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த இடத்திற்கு யாரிடம் அனுமதி வாங்கி, ஒப்படைத்தார்கள் என்று அரசு தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு கல்லூரி நிர்வாகம், விழா நடந்த இடம் கல்லூரிக்கு சொந்தமான இடம் இல்லை என பதில் அளித்துள்ளது.
நேற்று கூட விஜய் கறி வெட்டும் கட்டையின் மீது கால் வைத்துள்ளார், அதனால் தங்களது தொழிலுக்கு இழிவு ஏற்பட்டுள்ளது என கடைக்காரர்கள் ஒருபக்கம் போராட்டத்தைக் எழுப்பியுள்ளனர்.
சர்க்கார் படத்தில் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதற்காக, அவரது பேனர்கள், ரசிகர்கள் மற்றும் தியேட்டர்களை ஆளும் கட்சித் தொண்டர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை நினைவுகூரத்தக்கது.
ஆனால் ஒன்று, பிகில் பட வெளியீட்டில் தலைவா படத்தை போல் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், தளபதி விஜய் அதிரடியாக அரசியலில் இறங்கி விடுவார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.