சூப்பர்ஸ்டாரை வைத்து படம் தயாரித்து அவருக்கு சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்தது யார் தெரியுமா? பிரபல எழுத்தாளர் கலைவாணன் அவர்கள்தான்.
கலைவாணன் அவர்கள் தேவர் பிலிம்ஸில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, நான் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதில் யார் கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம்? என யோசிக்கும் போது அவர் மனதில் பட்டவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
ஆம். கலைவாணன் மட்டும் இல்லை என்றால் இன்று சூப்பர்ஸ்டார் இல்லை என்றே சொல்லலாம். அப்படி பெயர் பெற்ற கலைவாணன் தன்னுடைய கடைசி காலகட்டத்தில் சொந்த வீடுகூட இல்லாமல் அவர் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கலைவாணன் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்தார். அதில் பேசும்போது ஒரு சிலர் கலைவாணனிற்கு அரசாங்கம் சார்பில் இலவசமாக வீடு கட்டித் தர முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏன் அரசாங்கம் செய்ய வேண்டும்? நானே அவருக்கு இலவசமாக வீடு வாங்கி தருகிறேன் என மேடையிலேயே கூறினார். அதை தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் உங்களுக்கு எங்கு வீடு வேண்டுமா? அல்லது எப்பேர்பட்ட வீடு வேண்டுமா? நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள், பணம் நான் கொடுத்து விடுகிறேன்.
நான் வீடு பார்த்து உங்களுக்கு பிடிக்காமல் போய் விட்டால் உங்கள் மனசு கஷ்டப்படும். அதனால் உங்களுக்கு மனசுக்கு பிடித்த ஒரு வீட்டை பார்த்து சொல்லுங்கள், நான் பணம் முழுவதும் செலுத்தி விடுகிறேன் என கூறி, இப்பொழுது கலைவாணன் அவர்கள் ஒரு வீட்டை தேர்வுசெய்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதற்கு முழு பணத்தையும் கொடுத்து அவரை சொந்த வீட்டில் வாழ வைத்துள்ளார்.
சொல்றது தான் செய்வார்.. செய்யறதான் சொல்லுவார்..