இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு எம்.ஜி.ஆர். மகன் என பெயர் வைத்துள்ளனர். சசிகுமாருக்கு ஜோடியாக டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் அதர்வா ஜோடியாக அறிமுகமானார்.மேலும் சத்யராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இயக்குனர் பொன்ராம் கிராமத்து நகைச்சுவைக் கதைகளை இயக்குவதில் வல்லவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களில் ஒருவராக அமர்த்தியது என்றால் அது மிகையாகாது.
இவர் இயக்கிய சீமராஜா படம், சற்று சறுக்கியதால் உடனே சுதாரித்துக்கொண்ட பொன்ராம், நகைச்சுவை படங்கள் தான் தனக்கு ஏற்றது என அடுத்த கதையை ரெடி பண்ணி சசிகுமாரிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளார். சசிகுமாரும் சில நாட்களாக ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இந்த படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கானாஆன்டனி இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை புகைப்படத்துடன் தங்களது
ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். இந்தப்படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.