ரஜினி – தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக். பலரும் இதுகுறித்து கருத்துக்களை கூறி வந்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை நைய்யாண்டி செய்திருக்கிறார்.
பாபா படத்தில் இருந்தே பாமகவுக்கும் ரஜினிக்கும் ஏளாம் பொறுத்தம். நிலைமை இப்படி இருக்க ரஜினி அரசியலுக்கு வந்தால் சும்மா இருப்பாரா ராமதாஸ்? பிரசாந்த் கிஷோரை ரஜினி சந்திக்கச் சென்றதை வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நையாண்டி செய்திருக்கிறார். அதில் நேற்றைய பதிவில், ’ஒரு உரையாடல்: ‘அண்ணே… எங்கண்ணே போறீங்க?’ ‘அட… அது ஒன்னும் இல்லப்பா… இந்த பிரஷாந்த் கிஷோரை பார்த்துட்டு வரலாம்னு தான் போறேன்.
நேற்றைய உரையாடலின் தொடர்ச்சி… ‘அண்ணே…. பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?’, ‘இல்லப்பா…. அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன்’என நையாண்டி செய்துள்ளார். ஏற்கெனவே அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமியும், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் தங்களுக்கு பிரச்சார வியூகம் செய்யக் கோரி பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்ததை நையாண்டி செய்துள்ளார் பாமக ராமதாஸ்.