Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிகில் விஜய்யை காக்கா பிடிப்பதற்காக சிவாஜியைக் கிண்டலடிக்கவில்லை விவேக்

பிகில் விஜய்யை காக்கா பிடிப்பதற்காக சிவாஜியைக் கிண்டலடிக்கவில்லை விவேக்

Posted on September 25, 2019 By admin No Comments on பிகில் விஜய்யை காக்கா பிடிப்பதற்காக சிவாஜியைக் கிண்டலடிக்கவில்லை விவேக்

பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் கருத்துகளுக்கு அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சிவாஜி கணேசனின் பாடலை கிண்டலடித்ததாக கூறி நடிகர் விவேக்குக்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கண்டனத்திற்கு விவேக் விளக்கம் அளித்துள்ளார்.
‘பிகில்’ஆடியோ விழாவில் பேசிய விவேக் அத்திவரதருக்கு அடுத்த செல்வாக்கு விஜய்க்குத்தான் இருக்கிறது என்று பேசியதே சர்ச்சையாகியுள்ள நிலையில் 1960ல் வெளிவந்த ‘இரும்புத்திரை’பாடலை பிகில் படப்பாடலோடு ஒப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து சிவாஜி பேரவை அமைப்பின் தலைவர் சந்திர சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தொடங்கும் அருமையான பாடலை கிண்டலடித் திருக்கிறார்.மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்து விட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறு இல்லை. ஆனால் ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக, ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்று கொள்ள முடியாது.

ஏதோ இப்போதுதான் அந்த பாடல் மக்களுக்கே தெரிய வருவது போல கூறும் விவேக், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற 1960-ம் ஆண்டு வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால், ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறத்தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக். சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனத்தை பேசி கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜி கணேசனின் அருமையான திரைப்பட பாடலை பொதுமேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கு எதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி சிவாஜி சமூக நலப்பேரவை போராட்டம் நடத்தும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்,… 1960-ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி ‘‘நெஞ்சில் குடி இருக்கும் ’’ அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்துகொள்க’என்று விளக்கம் கொடுத்துவிட்டு சைலண்டாகிவிட்டார்.

Cinema News Tags:vivek-Bigil -indiastarsnow.com, பிகில் விஜய்யை காக்கா பிடிப்பதற்காக சிவாஜியைக் கிண்டலடிக்கவில்லை விவேக்

Post navigation

Previous Post: இப்படி ஒரு படம் எடுத்ததற்காக என்னை ரெண்டு செருப்பால அடிக்கணும் விரக்தியில் பார்த்திபன்
Next Post: நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ்

Related Posts

Colors Tamil to present the World Television Premiere of Vikram Prabhu’s *60 Vayadu Maaniram* this Weekend Cinema News
விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார். Cinema News
ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்: பரபரப்பை கிளப்பியுள்ள ஹரா* Mohan rocks in action avatar: Haraa glimpse raises expectations* Cinema News
Producer G. Dhananjayan’s daughter Revati daughter Revati-Abhishek Wedding Ceremony “ Cinema News
பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து Cinema News
Udhayanidhi has handled the releases of both the movies perfectly” – Actor Shaam’s Thanksgiving Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme