உலகின் கடைசித் திரைப்படம் எடுக்கப்படும் நாள் வரை ‘மி டு’பஞ்சாயத்துகள் இருந்தே தீரும் போல. ’மேடம் உங்க நிர்வாண அழகை நான் இஞ்ச் பை இஞ்ச் ரசிக்கணும்’என்று ஒரு தென்னிந்திய இயக்குநர், அதுவும் தேசிய விருது வாங்கியவர் கேட்டார் என்பதை அந்த அதிர்ச்சி கொஞ்சமும் குறையாமல் சொல்கிறார் நடிகை சுர்வீன் சாவ்லா
கன்னடப்படங்களில் அறிமுகமாகி அங்கிருந்து இந்தி,பஞ்சாபி மொழிகளுக்குத் தாவி இயக்குநர் வஸந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தவர் சுர்வீன் சாவ்லா. அடுத்து ‘புதிய திருப்பங்கள்’,’ஜெய்ஹிந்த் 2’ஆகிய படங்களோடு தமிழை விட்டு வெளியேறினார். அவர் சமீபத்திய டிவி.நிகழ்ச்சி ஒன்றில் ஆடிஷன் என்ற பெயரில் தனக்கு 5 முறை பாலியல் தொல்லைகள் தரப்பட்டதாகக் கூறியுள்ளார்.
“மேடம் ,உங்க உடம்பின் ஒவ்வொரு இஞ்சையும் பார்க்கணும்னு ஆசைப்படுறேன். ” என்று அந்த டைரக்டர் கேட்டபோது என்னால் நம்பவே முடியல.இப்படி எல்லாமா இருப்பாங்கன்னு ஆச்சரியமா இருந்தது. தென்னிந்திய சினிமா டைரக்டரைப் பத்தி நான் நினைச்சிருந்ததெல்லாம் நொறுங்கிப் போச்சு. இன்னொருத்தர் அவரும் தென்னிந்திய டைரக்டர் தான்.தேசிய விருது வாங்கியவர். ஆடிஷன் என்கிற பெயரில் என்னை படுத்தியபாடு ‘போதும்டா சாமி’ என்று ஊருக்கே போயிட்டேன். அப்பயும் விடல. மும்பைக்கும் வந்துட்டார். வேணாம் சார்னு சொல்லி விலகிட்டேன். பாலிவுட்ல இன்னும் மோசம். ஒரு டைரக்டர் எனது மார்பகத்தைப் பாக்கணும்னார். இன்னொருத்தர் தொடைய காட்டுமான்னார்.என்ன மனுஷங்க இவனுங்க” என்கிறார் சுர்வீன்.டைரக்டர்னு சொல்றதால டைரக்டா இறங்கிடுறானுகளோ?
