தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருக்கிறார். அமிதாப்புக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது ரசிகை ஒருவரின் முகநூல் பதிவு இது…
கிராமம் , ஏகாந்த இரவில் , மாளிகையின் நீண்ட தாழ்வாரத்தில் எரியும் ஒவ்வொரு விளக்காக ஜெயபாதுரி அணைத்துக் கொண்டே வருவார்.. கீழே ஓர் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மௌத் ஆர்கன் வாசித்துக் கொண்டே இருப்பார் அமிதாப்..கண்கள் .. கண்கள் மட்டுமே காதலைப் பேசும். அது போல ஒரு காதல் காட்சியை இதுவரை நான் பார்த்ததில்லை. That chemistry still gives me goosebumps…
முன்னாள் காதலியிடம் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல், குரல் , கண்கள் வழியே இழப்பின் வலியைக் கடத்தும் கபீ கபீ படக்காட்சி, தொண்டையின் Adam’s apple கூட உருண்டு அவர் நடிப்புக்குக் குரல் கொடுப்பது போல இருக்கும் ஓ சாத்தீரே பாடலாகட்டும், மேரே பாஸ் மா ஹை என்னும் பதிலுக்குத் துவளும் மகனாகட்டும்.. ரசித்து ரசித்து , பின் அவரது ஒவ்வொரு படத்தின் கேசட்டையும் பைத்தியம் மாதிரி வாங்கிப் பார்க்க ஆரம்பித்தேன். காதல் மன்னனிலிருந்து கோபம் பொங்கும் இளைஞனாக அவர் சித்தரிக்கப் பட்ட சஞ்சீர், லாவாரிஸ், அக்னீபத், காலா பத்தர், தீவார் ,போன்ற மற்றும் பல படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். பின் அவருடைய இரண்டுங் கெட்டான் ஆன காமெடி கலந்த கதாபாத்திரங்கள், வயதுக்கு ஒவ்வாத நாயக வேடம் என்ற சொதப்பல்களிலிருந்து மீண்டெழுந்து வந்து அவருடைய சிறப்பான இன்னிங்ஸைத் தொடங்கினார். பாக்பான், சர்க்கார் , சீனி கம், முதல் இன்றைய பிக்கு ,பிங்க் வரை.. I just love the choice of roles he choose now. ( and Of course, Nishabd is an eye sore )
சறுக்கல்களிலிருந்து கற்றுக் கொண்டவர்.. சொந்தவாழ்வு, தவறான அரசியல் பங்களிப்பு, நசிந்த தொழில், தொய்ந்து போன திரைப்பட வாய்ப்புகள், மோசமான விபத்து , உடல் நிலை என அனைத்திலிருந்தும் மீண்டு வந்தவர்.
வணிக சினிமாவிலிருந்து நகர்ந்து எனது ரசனை யதார்த்த சினிமாவின் பக்கம் அதிகமாகத் திரும்பி விட்ட போதும் என்னால் தவிர்க்க முடியாத ஒரு நடிகர், ஆளுமை இவர்தான். ஓ, அமிதாப் !என்று அவர் மீது உருகிய காலங்கள் இன்று பச்சன் ஜி யாக மரியாதை நிமித்தம் மாறி விட்ட போதும் , என்றும் மாறாதது அவருடைய பரம ரசிகை என்னும் நிலைப்பாடு.He is a phenomenal personality, actor par excellence, Undoubtedly an asset to Indian cinema…முகநூலில் லதா அருணாச்சலம்.