தர்பார் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற இருப்பதால் அங்கே முகாமிட்டு உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக நடிப்பதால் இப்படம் பாக்ஸ்ஆபிஸில் வசூல்சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் தர்பார் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்திமுடித்தார். தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவுடன் படக்குழு லண்டன் புறப்படுகிறது.
இன்டர்நேஷனல் தீவிரவாதிகளை வேட்டையாடும் போலீஸ் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கமர்சியல் உடன் சேர்த்து சமூகப் பிரச்சனைகளை கலந்துகட்டி ஹிட் அடிப்பதில் வல்லவர் நம் ஏ.ஆர். முருகதாஸ்.
இவர் தளபதி விஜய் வைத்து இயக்கிய துப்பாக்கி படம், விஜய்யின் மார்க்கெட்டை அவரை நினைத்து பார்க்க முடியாத உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதில் ராணுவ அதிகாரியாக விஜய், அமைதியாகவும் அதேநேரத்தில் திறமையான வீரராகவும் அசாத்தியமாக நடித்திருப்பார்.
ஏ.ஆர். முருகதாஸ் இடம் கதை கேட்டபோது ரஜினிகாந்த், துப்பாக்கி படத்தை போல படு ஸ்டைலிஷாக இருக்கவேண்டும் என கண்டிஷன் போட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
அதேபோல் முருகதாஸ் இன்டர்நேஷனல் இன்டர்நேஷனல் terrorism என்ற கதையை மையப்படுத்தி படப்பிடிப்பு துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு லண்டனில் நடக்க இருப்பதால் படக்குழு லண்டன் சென்றது.